மோட்டார் சைக்கிள் விபத்து: இராணுவ சிப்பாய் மரணம்

-பதுளை நிருபர்-

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய் நேற்று ஞாயிற்று கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி பிபிலை பதுளை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிள் பிபிலை பதுளை வீதியில் 36 ஆம் கட்டை பகுதியில் சறுக்கி கீழே விழுந்தது பலத்த காயமடைந்த நிலையில் பிபிலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்