
மின்சார கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
ஊவா பகுதியில் சட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பரணகம, ஹகிலியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மின்சாரக் கம்பி வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க பயன்படுத்தப்பட்டதாகவும் இதிலே குறித்த விவசாயி சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
