
யாழில் 91 குழந்தைகளை பிரசவித்துள்ள சிறுமிகள்
யாழ்ப்பாணத்தில் சமீபக் காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, யாழ் போதனா வைத்தியசாலையில் 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழலில் பெண்குழந்தைகளுடைய பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
