கட்சி பெயரில் மாற்றம் செய்தார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த 2ஆம் திகதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தேர்தல் ஆணையகம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற விஜயின் கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்