மீகொடை துப்பாக்கி சூடு: 2 சந்தேகநபர்கள் கைது

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய 2 சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன கடவத்தை கிரில்ல பகுதியில் உள்ள உணவகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிந்தது.

இதற்கமைய குறித்த உணவகத்தின் உரிமையாளரும் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய யுவதியை மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றமை குறிப்பிடதக்கது.