
மட்டு விபத்தில் – காத்தான்குடியை சேர்ந்தவர் மரணம் மூவர் படுகாயம்
ஏறாவூர் நிருபர் – உமர் அறபாத்
மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
காத்தான்குடியை சேர்ந்த முச்சக்கர வண்டியே குறித்த விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் றியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் – குழந்தை, பெண் உட்பட மேலும் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


