இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

வீரபுரம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை மீட்க முயற்சித்தனர். எனினும் உயிரிழந்த நிலையிலேயே அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.