
மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்
-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-
மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் உள்ள படையாண்டவெளி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை காட்டு யானை ஒன்று தனியார்காணியினுள் நுழைந்தது பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த தனியார் காணியினுள் நுளைந்த காட்டு யானை அங்கிருந்த பயன் தரும் 7 தென்னைமரங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருப்பதாகவும் காட்டு யானையை துரத்தும் முயற்சியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் காட்டு யானைகளின் அச்சத்தில் இருப்பதுடன் இதற்கு உரிய தீர்வினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

