23 வயதுடைய பெண் அடித்துக் கொலை கணவன் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் நேற்றிரவு 23 வயதுடைய பெண்ணொருவர் கணவனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் பொல்லொன்றினால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது, இச்சம்பவம் தொடர்பில் 32 வயது கணவர், கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.