
சுகாதார அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விஷேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தற்போது மட்டு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே கலாரஞ்சனி தலைமையில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இன்றைய கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திர காந்தன் மற்றும் சதாசிவம் வியாளேந்திரன் ஆகியோருடன் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன உட்பட சுகாதார துறை அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

