
நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த இளம் பெண் மீட்பு
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த இளம் பெண், பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
நீர்த்தேக்கத்தில் யுவதி விழுந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸார் வரும் வரையிலான உள்ள காலப்பகுதியில் அவரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பொது மக்களில் பலர் தண்ணீரில் குதித்து கயிறுகளின் உதவியுடன் வெளியே எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அகரபத்தனை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண், தனக்கு வேலை கிடைக்காமல் சிரமப்பட்டதாகவும், நீர்த்தேக்கத்தின் கரையோரம் நடந்து செல்லும் போது தலைசுற்றியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
