கித்துள் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை மரம் விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இஸ்கோலவத்த – எகிரிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கெட்டில்லவல பிரதேசத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் முறிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த நிலையில் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.