
தகுதி வாய்ந்த அதிபரை நியமித்து தருமாறு பெற்றோர்கள் போராட்டம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்விகுட்பட்ட தி/கி/இஹ்ஸானியா வித்தியாலய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியா கொழும்பு பிரதான வீதியில் உள்ள பாடசாலையின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுதி வாய்ந்த அதிபரை தங்கள் பாடசாலைக்காக நியமித்து தருமாறு பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் பதாகைகள் ஏந்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 வருடங்களுக்கு மேலாக மாணவியர்களினது கற்றல் கற்பித்தல் நடவடிக்கை வருடத்திற்கு வருடம் சீரற்று காணப்படுகின்றது. அத்துடன் மாணவிகளின் இணைப்பாடவிதான செயற்பாடுகளும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே பாடசாலைக்கு நியமனம் பெற்றுவந்த அதிபரை உடனடியாக நிரந்தரமாக்கிதருமாறு கேட்டு பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பாடசாலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

