
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமானால் வீடுகள் வழங்கி வைப்பு
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்காக 2023ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6 இலட்சம் மற்றும் 10 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கபடவுள்ளன.
அதன் முதல் கட்டமாக மூன்று வீடுகள் பிரதேச செயலாளர்.ரி.கஜேந்திரன் தலைமையில் நேற்று முன் தினம் புதன் கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டபிளியு.டி வீரசிங்க ஆகியோர் பயனாளிகளுக்கு கையளித்தனர்.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா நிர்வாக உத்தியோகத்தர் ரி.மோகனராஜா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் என்.கந்தசாமி திட்டத்திற்கான கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


