இலங்கையில் சீன மரதன் ஓட்டப்போட்டி

முதலாவது சீன மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடத்தவுள்ளதாக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சீன மரதன் ஓட்டப்போட்டியில் 2000-3000 க்கும் மேற்பட்ட சீன விளையாட்டு வீரர்கள் ‘நி ஹாவ் சோங் குவோ’ திட்டத்தின் கீழ் பங்கேற்பார்கள் எனவும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் கூறியுள்ளார்.

அண்மையில் சீனாவில் உள்ள சோங்கிங் நகரசபைக்கு விஜயம் செய்த ஷிரந்த பீரிஸ், அடுத்த இரண்டு வருட காலப்பகுதியில் மேலதிக சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான Ni Hao Zhong Guo திட்டத்தின் கீழ் உடன்படிக்கையை மேற்கொண்டார்.

 

அதன்படி, இந்த ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை சீன வீராங்கனைகளுக்கு மரதன் ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உனவட்டுன கடற்கரைப் பகுதியில் கடல் உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹு இதனை வருடாந்த நிகழ்வாக மாற்றுவதற்கான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.