பொருளாதார நெருக்கடி: மீன்களின் உணவுகளை உண்ணும் மக்கள்

நைஜீரியாவில் மக்களின் பிரதான உணவாக அரிசி காணப்படுகின்ற நிலையில், அரிசி விலை அதிகரிப்பால் தரம் குறைந்த அரிசியை பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரிசி ஆலைகளில் முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த அஃபாஃபாடா எனும் தடிமனான, சமைக்க கடினமான அரிசி வகையை பயன்படுத்த அந்நாட்டு மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன், அஃபாஃபாடா அரிசியை, மீன்களுக்கு உணவிட பயன்படுத்துபவர்களிடம் குறைந்த விலைக்கு அரிசி ஆலையின் உரிமையாளர்கள் விற்று வந்தனர், சில சமயங்களில் அந்த அரிசியினை விற்காமல் தூக்கி வீசியும் உள்ளனர், ஆனால், இந்த நிலை தற்போது அங்கு மாறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் ஏழை, எளிய மக்கள் இந்த அரிசியினை தற்போது அதிகளவில் பயன்படுத்த தொடங்கியிருப்பதால், மீன் பண்ணை வைத்திருந்தவர்களுக்கு இப்போது அஃபாஃபாடா கிடைப்பதும் அரிதாகி வருகிறது.