
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பருப்பு, டின் மீன் உள்ளிட்ட 8 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
