பொதுக் கழிவறை கட்டணம் தனி நபருக்கு 30 ரூபாவால் அதிகரிப்பு

கொழும்பு பாஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் பொதுக் கழிவறை வசதிகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் தனி நபருக்கு 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கழிவறை பயன்பாட்டுக் கட்டணம் தனி நபருக்கு 20 ரூபாவாக இருந்து வந்துள்ள நிலையில் நாளாந்த செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தனிநபருக்கான கட்டணம் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அடுத்து, பஸ்டியன் மாவத்தையில் கழிவறை வசதிகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குடிநீர் கட்டண உயர்வால் மாத குடிநீர் கட்டணம் ரூ. 175,000 ஆகவும், எனவே கழிவறை வசதிக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.