
வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து விபத்து
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஏ9 வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வேக்கட்டுப்பாட்டை இழந்து இன்று புதன் கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆயினும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
