மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

-மன்னார் நிருபர்-

மன்னார் உப்புக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளுடன் 2 சந்தேக நபர்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடையவர்கயே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

வடமேற்கு கடற்படை கட்டளையினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வடமத்திய கடற்படை கட்டளையில் உள்ள கஜபா மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் மன்னார் உப்புக்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையில் 20 ப்ரீகாபலின் கேப்சூல்கள் வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது ஒரு வீட்டில் இருந்து 1432 ப்ரீகாபலின் காப்ஸ்யூல்கள் மற்றும் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து அதே மருந்தின் 20 காப்ஸ்யூல்கள் உடன் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.