2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

2023 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், 2023 க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2023 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளது.

அதனை தொடர்ந்து, செயன்முறை பரீட்சைகள் நடத்தப்பட உள்ளதுடன், அதனையடுத்து சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நடனம் மற்றும் இசை ஆகிய பாடங்கள் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.