திடீர் சுகயீனம் காரணமாக:18 மாணவர்கள் வைத்தியசாலையில்

வெல்லவாய – மல்வத்தாவல பகுதியில் இன்று புதன்கிழமை ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மல்வத்தாவல பகுதியில் உள்ள குறித்த பாடசாலையின் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்ட நிலையில் இவ்வாறு திடீர் சுகயீனமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித பாரதூரமான பாதிப்பும் இல்லை என வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.