படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழப்பு

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களது படகு கவிழ்ந்ததில் இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.