
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் ஆங்கில அறிவை மேம்படுத்தும் விசேட திட்டம்
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் விவசாய டிப்ளோமா 2024 ம் கல்வியாண்டு மாணவர்களின் தொழில்நுட்ப விவசாய ஆங்கில அறிவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றை சிரேஸ்ட மாணவர்கள் (2023) முன்னெடுத்துள்ளனர்.
இனிமேல் தங்களின் இத்திட்டம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என சிரேஸ்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
மூவின மாணவர்களும் உள்ளபடியால் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.








