வாகன விபத்து: ஒருவர் மரணம்

அநுராதபுரத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை – நாவுல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இதன் போது உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து கண்டி பிரதேசத்தை நோக்கி பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மாத்தளை – நாவுல பஸ் நிலையத்திற்குள் நுழையும் போது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.