
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் குழப்பநிலை: 7 மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு சிற்றுண்டிச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவியும் இரண்டு மாணவர்களும் தற்போது பம்பஹின்ன மற்றும் பலாங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
