வாகன விபத்து: பெண் உட்பட 6 பேர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம், கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த  இலங்கைக்கு சொந்தமான அரச பேருந்தும் இராணுவத்தினரின் ரக் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது, விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிஸாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.