ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலையில் இன்று திங்கட்கிழமை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளினால் குறித்த சடலம் லிந்துலை – நாகசேனை பகுதியில் உள்ள அக்கரகந்தை ஆற்றில் கிடப்பது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் தொடர்பில் எந்தவித தகவல்களும் தெரியவராத நிலையில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.