
மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லை: அரசாங்க அதிபர்
மட்டக்களப்பில் நாளை இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சில ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் லெவளியாகியிருந்தது
இந்த நிலையில் இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு அரசாங்க அதிபருடன் நாம் சந்திப்பொன்றை ஏற்படுத்தி இவ்விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் உள்ள ஊடக பிரிவினரால் காணொளி பதிவு செய்யப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஊடக பிரிவின் தலைமை அதிகாரி ஜீவானந்தன் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடக பிரிவிற்கும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமிடையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பாக முறுகல் நிலை கடந்த காலங்களில் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க
