சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு

-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்-

 

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு 1 மில்லியன் ரூபா நிதி சம்மாந்துறை பிரதேச செயலகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் சிபாரிசின் அடிப்படையில் கணனி கொள்வனவிற்காக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்லூரியின் அதிபர் எஸ்.தியாகராஜா பிரதேச அபிவிருத்திக்குழுவிற்கும், தலைவர் அதாவுல்லாவிற்கும், பிரதேச செயலாளருக்கும் நன்றி தெரிவித்தார்.