
அம்பாறையில் கரை ஒதுங்கிய சடலம்
-அம்பாறை நிருபர்-
அம்பாறை கடற்கரையோர பகுதியில் இன்று திங்கட்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய வருகை தந்த பெரிய நீலாவணை பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
