
வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
இரத்தினபுரியில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களும், உயிரிழந்தவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த இளைஞர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
