
விளையாட்டு வினையானதில் சிறுவன் உயிரிழப்பு
நுவரெலியாவில் இன்று ஞாயிற்று கிழமை மரத்தில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நுவரெலியா மாகாஸ்தோட்ட பகுதியில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.
மூத்த மகள் பல்கலைக்கழக படிப்புக்குச் சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார்.
தாய் தனக்குத் தலைவலியென வீட்டில் படுத்து இருந்த நிலையில் சிறுவனை அவதானித்த அருகிலிருந்த வீட்டார் சிறுவனை மீட்டனர். பின் அவசர அம்புயூலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்த வைத்தியர்கள் சிறுவனைப் பரிசோதித்த போது சிறுவன் உயிர் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நுவரெலியா பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
