
வீட்டில் புகுந்து கொள்ளையிட முயன்றவர் அடித்துக்கொலை
மினுவாங்கொடையில் வீடொன்றில் புகுந்து கொள்ளையிட முயன்ற 3 பேரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு, அயல் வீட்டுக்காரரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை, யக்கொடமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முற்பட்ட 3 பேரில் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
