
நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான யு.எல்-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய அவர், பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
