அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது

முல்வைதீவு பகுதியில் இரண்டு டிப்பர் வண்டிகளில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல் மணல் ஏற்றிச் சென்றமை தெரியவந்துள்ளது.

இரண்டு டிப்பர் வாகனங்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வானத்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.