வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா புளியங்குளம்இ பழையவாடியில் நேற்றையதினம் வியாழக்கிழமை தனியாருக்கு சொந்தமான பண்ணை காணியில் இருந்து யானை சடலமாக மீட்கப்பட்டள்ளது.

குறித்த காணியில் நேற்று யானை இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம்பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் இன்று வெள்ளிக்கிழமை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அக்காணியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.