
மட்டு. வந்தாறுமூலை கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டப்பேரணி-வீடியோ இணைப்பு
மட்டக்களப்பு – வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
மகாபொல , பேசரி கொடுப்பணவை அதிகரிக்க கோரியும், மாணவர்களுக்கான பல்கலைக்கழக விடுதியை வழங்க கோரியுமே இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
களுவன்கேணி பகுதியில் பகுதியில் அமைந்துள்ள மாணவர்களின் விடுதி – வீதியில் ஆரம்பமான குறித்த எதிர்ப்பு பேரணி கொம்மாதுறை பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தை அடைந்தது.
நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்க மாணவர்கள் இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன், மாணவர்களினால் – விழிப்புணர்வு வீதி நாடகமும் பேரணியின் போது இடம்பெற்றது.
பேரணி பல்கலைக்கழகத்தை அடைந்ததும் பல்கலைக்கழக வளாகத்தில் முன் வீதியோரத்தில் கையில் பதாதைகளுடன் ஏந்தியவாறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.


