2000 ரூபாவிற்கு விற்கப்பட்ட மரக்கறி

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை நாட்டில் உள்ள வேறு எந்த ஒரு பொருளாதார மையத்திலும் நேற்று முருங்கை விற்பனை செய்யப்படவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மெகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 650 ரூபாவாக குறைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.