மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

-சியாப் ஆக்கில்-

தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் விசேட உத்தரவில் மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியில் ஆர்.பீ.எல் திட்டத்தின் ஊடாக துறைசார் வல்லுனர்களுக்கு NVQ Level 3, NVQ Level 4 வழங்குவதற்கான நடவடிக்கையை அதிபர் சோமசூரியம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் மூன்று வருடம் துறைசார் வல்லுனர்களுக்கான அனுபவ சான்றிதழுடன் அதிபரை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

(கீழ் காணப்படும் துறைகளில் அனுபவம் இருந்தும் அதற்குரிய முறையான கல்வியை கற்ற சான்றிதழை பெற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். சிறந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக TVEC யினால் வழங்கப்படும் NVQ சான்றிதழைப் பெற்று கொள்ள தொழில் அநுபவம் உள்ளவர்கள் மட்டக்களப்பு தொழிலநுட்ப கல்லூரி அதிபரைதொடர்பு கொண்டு இதற்காக அனுமதியை பெறலாம் )