சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்

சனத் நிஷாந்தவின் வெற்றிடமடைந்த பாராளுமன்ற ஆசனத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்ற உறுப்பினர் நியமனம்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமடைந்த பாராளுமன்ற ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை புதிய பாராளுமன்ற உறுப்பினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.