
ஆப்கானிஸ்தான் – இலங்கை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது .
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குஷால் மெண்டிஸ் தலைமையிலான குறித்த குழாமில் சரித் அசலங்க, பெத்தும் நிசங்க , விஷ்கா பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, வனிது ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, அகில தனஞ்ஜய, ஷாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த ஷமீர, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான் மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த ஒருநாள் தொடரின் உப தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.
