பெரும் போக வேளாண்மையில் பாரிய வீழ்ச்சி

-கிண்ணியா நிருபர்-

தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடையானது இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இருந்த போதிலும் இம் முறை அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பத்து ஏக்கர் வன்னியனார் மடு விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் ஒரு வகையான நோய் தாக்கம் ஏற்பட்டமையால் நெற் செய்கை அழிவடைந்துள்ளதுடன் விலைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கருக்கு எட்டு தொடக்கம் பத்து மூடைகளுக்கும் குறைவாகவே கிடைக்கப் பெறுகின்றது நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை தற்போது ஒரு மூடை 5500 வரை செல்கிறது வெட்டுக் கூலி 17000 ரூபா என பல செலவுகள் போக மிஞ்சி இருப்பது எதுவுமே இல்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இப் பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே பசளைகளை உரிய நேரத்தில் பசளைகளாக தருமாறும் தரமான கிருமி நாசினிகளை விவசாயிகளுக்காக குறைந்த விலையில் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.