பெற்ற பிள்ளைகளை தாக்கி காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த தந்தை

ஹட்டனில் தந்தை ஒருவர் தமது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தி அதனை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுவர்கள் பத்தனை பகுதியில் உள்ள பாட்டனாரின் பராமரிப்பில் இருந்துள்ளனர்.இந் நிலையில் கடந்த 5 ஆம் திகதி குறித்த சிறுவர்களின் தந்தை, அவர்களை தாக்கியதுடன், அதனை ஒளிப்பதிவுசெய்து காணொளியை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.