லிவ்-இன் உறவாளர்கள் தொடர்பில் வெளியான சட்டம்

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதாவில், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், அது குறித்து பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் ஒரு மாதத்துக்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும், செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.