Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நட்சத்திரங்கள் வருகை

-யாழ் நிருபர்-

Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் இன்று  யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள்

எதிர்வரும் 9ஆம் திகதி குறித்த நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது..

NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெற விருந்தது.

எனினும் அப்போது நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது.

குறித்த இசை நிகழ்ச்சியில், நடன இயக்குனர் சாண்டி, யோகிபாபு, நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.