
தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவில் பன்றி வெடிக்குள் சிக்கி குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த பழனி வடிவேல் (வயது – 65) எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேன் எடுப்பதற்காக குறித்த நபரும், மேலும் சிலரும் காட்டுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில் குறித்த நபர் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் படுகாயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
