
வாகன விபத்து: மருத்துவர் படுகாயம்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வைத்தியரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த சிறிய ரக வாகனமும் எதிரெதிரே மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
