முந்தி செல்ல முற்பட்ட காரின் நிலை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

புதுக்குடியிருப்பு பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்இ முச்சக்கரவண்டி மீது தோதியுள்ளது.

குறித்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.