
காட்டுயானை தாக்கி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி படுகாயம்
மாத்தறையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவரே இதன் போது காயமடைந்துள்ளார்.
காட்டு யானையை விரட்ட முற்பட்ட போதே இவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மூன்று விலா எலும்புகள் உடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
